இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான முழுமையான விடயங்களை சபைக்கு சமர்பிப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் சபாநாயகரிடம் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான முழுமையான விடயங்களை சபைக்கு சமர்பிப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபாநாயகரிடம் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று (08) நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடிய போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எரிபொருள் கொள்வனவு மற்றும் இறக்குமதி தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ளார்கள்.

எரிபொருள் இறக்குமதி தொடர்பிலான தகவல்களை வெளிப்படை தன்மையுடன் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தினார்கள். இதற்கமைய 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பான சகல விடயங்களையும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: