இயந்திரத்திற்குள் சிக்கி இலங்கையர்  ஒருவர் கொரியாவில் உயிரிழப்பு!

Tuesday, August 8th, 2017

கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் தேகு என்ற பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய சாம் சௌமிய பாலித என்ற இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கியிருந்த நூலினை எடுத்து விடுவதற்காக செல்லும் போது மற்றொரு இயந்திரத்தினுள் விழுந்த இந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 2008ஆம் கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில் தற்போது வரை வீசா இன்றி சட்டவிரோதமாக அவர் தங்கியிருந்தார் என தெரியவந்துள்ளது.

Related posts: