இபோசபையின் விசேட பேருந்து சேவை, இன்றுமுதல் மேலும் அதிகரிக்கப்பு – இலங்கை போக்குவரத்துச் சபை சபையின் தலைவர் அறிவிப்பு!

Saturday, April 16th, 2022

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக நடைமுறைப்படுத்தப்படும், விசேட பேருந்து சேவை, இன்றுமுதல் மேலும் அதிகரிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் பேருந்துகள், இன்றும், நாளையும் வழமைபோன்று சேவையில் ஈடுபட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகள் வழமைபோன்று சேவையில் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கள்கிழமைவரை, அலுவல தொடருந்துகள் வழமைபோன்று சேவையில் ஈடுபடுமாட்டாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வறாறிருப்பினும், தூர இடங்களுக்கான தொடருந்து சேவைகள், வழமையான நேர அட்டவணைக்கு அமைய இடம்பெறும் என்றும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: