இன்று இலங்கைக்கு வருகைதருகின்றார் இந்தியப் பிரதமர்!

Sunday, June 9th, 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய பிரதமரை வரவேற்பதற்காக ஜனாதிபதி செயலகத்தில் இன்று விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்டு அரச தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியினால்,  இந்திய பிரதமருக்கு விசேட மதிய உணவு விருந்துபசாரமொன்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கையில் அரச முறை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது அரச தலைவர் இந்தியப் பிரதமராவார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 3 ஆவது இலங்கை விஜயமாக இந்தப் பயணம் அமைகின்றது.

முன்னதாக கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர், இன்று முற்பகல் 11 மணியளவில் கொழும்புக்கு வரவுள்ளார்.

சுமார் 4 மணிநேரம் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், பிற்பகல் 3 மணியளவில் தனது வியத்தை நிறைவு செய்து இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: