இனி பாடசாலைகளிலும் பற் சிகிச்சை நிலையங்கள்!

Friday, June 17th, 2016

பாடசாலைகளில் பற் சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சகல பாடசாலைகளிலும் பற் சிகிச்சை நிலையத்தை அமைப்பதோடு,ஏற்னகவே அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் இதனை புதுப்பிக்கவும் தீர்மானித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 536 பாடசாலைகளில் பற் சிகிச்சை நிலையங்கள் காணப்படுவதாகவும், இதில் 306 நிலையங்களை புதுப்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் புதுப்பிக்கப்படும் பற் சிகிச்சை நிலையங்கள் பாடசாலை சுகாதார மத்திய நிலையமாக செயற்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.குறித்த மத்திய நிலையத்திற்குள் மருத்துவ ஆலோசனை சேவைகள் ,விளையாட்டு மருத்துவம் தொடர்பான அறிவுரைகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: