இந்திய பிரதமரிடம் பல கோரிக்கைகளை முன்வைக்கவுளோம் – கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்

Thursday, May 11th, 2017

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேலும் 25000 வீடுகள் உட்பட பல கோரிக்கைகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமர் நாளை மலையகத்திற்கு வருகை தரவுள்ள நிலையில், அவரை தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இதன்போது மோடியிடம் வீடமைப்பு, கல்வி அபிவிருத்திக்காக தமிழகத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்தல், மலையகத்திற்கு பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கும் மக்களின் வாக்குரிமைக்கும் கிடைத்த மாபெரும் வரலா...
எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு வியத்மக அமைப்பிடம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வேண்டுகோள்!
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் - ஆறு உற்பத்தி...