இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பஷில் – புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விஜயத்தின்போது கடன் பெறுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, என்றும் மாற்று வழிமுறைகள் ஊடாக நாட்டுக்கு தேவையான வெளிநாட்டு கையிருப்பை பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும், தேர்தல் முறைமை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சூறாவளியால் பருத்தித்துறை கடற்பரப்பில் 40இற்கு மேற்பட்ட படகுகள் அடித்துச்செல்லப்பட்டன!
வீதியால் செல்லும் பெண்கள் மீது மர்மகும்பல் தாக்குதல் - பீதியில் உறைந்தது ஊர்காவற்றுறை!
நாடாளுமன்ற உறுப்பினர்களை துன்புறுத்த முயற்சித்ததாலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் - அம...
|
|