இந்தியாவின் திட்டத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் உள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை திட்டத்தில் இலங்கை விசேட இடத்தில் இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையின் பிரகாரம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள 5 இலட்சம் டோஸ் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனாகா தடுப்பூசிகளை செலுத்தும் வேலைத்திட்டம் நேற்று உத்தியோகப்பூர்வமாக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

தடுப்பூசி செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கையால் முடியும் என்பது மீண்டும் உலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புகளுடன் தான் இந்த உலகளாவிய தொற்றுக்கு எதிராக செயற்பட முடியும்.

இந்த விடயத்தை பேசும்போது இந்தியாவின் கொள்கையை இரண்டு வார்த்தைகளில் தெரிவிக்க விரும்புகிறேன்.

முதலாவது நாம் அனைவரும் ஒரு குடும்பமாகும். இரண்டாவது பிரதமர் மோடியின் கொள்கையாகும். அதாவது அயல்நாடுகளுக்கு முன்னுரிமையளிப்பதே இரண்டாது வார்த்தையாகும்.

அந்த விடயத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் இலங்கை உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: