ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் குழுவைச்சேர்ச்த நால்வர் இந்தியாவில் கைது!

Thursday, May 26th, 2016
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச்செல்ல  பணம் பெற்றுக்கொண்டதாகக்  கூறப்படும்  இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் இலங்கை அகதி உட்பட நால்வரை தமிழ்நாடு கோயம்புத்தூர்  பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
கொத்தூர்  அகதி முகாமைச் சேர்ந்த  எடிசன் எலியஸ் ராஜா ( 48), இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த விமலன்  (31),  தமிழ்நாடு வலசரவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் பெட்ரிக் (27) நேசப்பாக்கம் சென்னையைச் சேர்ந்த விஜிதா (34) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கும்புடிப்பூண்டி, கொத்தூர்  அகதி முகாமைச் சேர்ந்த அறுவரிடம் இருந்து 370, 000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணத்தை பறிகொடுத்த கொத்தூர் அகதி முகாமைச் சேர்ந்த முத்துராஜ்  என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
மேலும் கொத்தூர்  அகதி முகாமைச் சேர்ந்த  முத்துராஜ் உட்பட வின்சன் ராஜ் , சிவராஜன், ராமஜெயம்,சதீஸ், ஜெயந்தன்  ஆகியோரே இவ்வாறு பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு தற்போது சென்னை புழல் சிறைச்சாலையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
 Untitled-2 copy

Related posts: