ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் – இலங்கை அணிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு முறைப்பாடு!

Tuesday, September 19th, 2023

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்றையதினம் (18.09.2023) இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததுடன், இறுதிப் போட்டியில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களுடன் தோல்வியடைந்தமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், போட்டியில் முறைகேடு நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

உடுவில் மாணவிகள் தொடர் போராட்டம்: உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில் யாழ் போத...
அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதி பத்திரத்தின் காலம் நீடிப்பு - பிரதிப் பொலிஸ்மா அதிப...
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க இலங்கை கைத்தொழில்...