ஆசிரியர்கள் வெளி நாடுகளுக்கு விடுமுறையில் செல்ல கட்டுப்பாடு – கல்வி அமைச்சு!

Tuesday, February 21st, 2017

இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நாட்டுக்கு ளெியே விடுமுறையில் செல்வது தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்களிலும் உயர்தர வகுப்புக்களிலும் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு விடுமுறை பாடசாலையில் இறுதித் தவணையில் மாத்திரம் வழங்கப்படும்

க.பொ.த சாதாரண தர வகுப்புகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு விடுமுறை கல்வியாண்டின் 1ஆவது பாடசாலைத்தவணைக் காலப்பகுதியில் மாத்திரம் வழங்கப்படும்

பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 08/2017 இலக்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ministry_of_Education-1-4

Related posts: