ஆசிரியர்களின் போராட்டம் இடைநிறுத்தம்!

Thursday, February 16th, 2017

வடக்கு மாகாண திணைக்களத்தின் முன்பாக நடத்தப்பட்ட ஆசிரியர்களின் பேராட்டம் கைவிடப்படுகின்றது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்ளுக்கு விதிக்கப்பட்ட பணித்தடையை நீக்கக்கோரித் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் இடையே நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சந்திப்பில் பணித்தடை தற்காலிகமான நீக்கப்படுகின்றது என்றும் கடமையில்                           ஈடுபட்ட பாடசாலைகளில் அவர்கள் கடமையைத் தொடரமுடியும் எனவும் தெரிவிக்ப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை முடிவுகள் வரும்வரை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. விசாரணையின் ஊடாக ஆசிரியர்களுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

protest-7

Related posts:


தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கும் வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் - இலங்கையின...
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில் பொதுமக்களின் கருத்தறிந்தது!
அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு...