அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கிடைக்காதவிடத்து மாற்று வழிகள் – தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி !

Friday, April 30th, 2021

இந்தியாவிடம் இருந்து அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கிடைக்காதவிடத்து, அதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயப்படுவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

முதலாவது தடவை அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு, இரண்டாவது தடவையாக மாற்று தடுப்பூசிகளை செலுத்துவது தொடர்பில் ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

இதன் முடிவுகள் சாதகமாக அமையுமாயின், இரண்டாவதாக மாற்று தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு இல்லாவிடின், முதலாவது தடுப்பூசியை விடுத்து புதிதாக இரண்டு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட்-19 பரவல் நிலைமைக்கு அமை, தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளில் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலக தீர்ம...
ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன வி...
உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளான விவகாரம் - கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற...