அவுஸ்திரேலியாவை அபார வெற்றிக்கண்டுள்ளார் முரளி – அமைச்ர் அர்ஜுன

Wednesday, July 27th, 2016

முரளியின் பந்துவீச்சு விதிமுறைக்கு மீறியது என   குற்றம் சுமத்திய அவுஸ்திரேலியா அணி அவரை தமது அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக அழைக்குமானால் முரளி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிக்கொண்டுள்ளார் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-

அவுஸ்திரேலியாவுக்கு முரளிதரன் ஆலோசகராக செயற்படுவாராக இருந்தால் அவரை குற்றம் கூறுவது சரியானதல்ல. புதிய கிரிக்கெட் சபை தேர்தலின் பின்னர் இலங்கை அணியின் பயிற்சியாளர்களான அத்தபத்து, புஸ்பகுமார, சமிந்தவாஸ் மற்றும் உபுள்சந்தன ஆகியோர் விலக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு முன்னணி வீரர்களை அணியின் பயிற்சியாளர்களில் இருந்து நீக்கிவிட்டு வெளிநாட்டு பயிற்சியாளர்களை கிரிக்கெட் சபை நியமித்திருப்பதால் அவர்கள் வேறு அணிகளுக்கு பயிற்சி அளிப்பதில் தவறில்லை.

நான் இருந்திருந்தால் முரளியை அவுஸ்திரேலியாவிற்கு பயிற்சியளிக்க விட்டிருக்கமாட்டேன். அதுமாத்திரமின்றி சங்கக்கார, முரளி, ஜயவர்தன போன்ற சிறந்த வீரர்களை நாட்டில் வைத்துக்கொண்டு, அவர்களிடம் இருந்து கிரிக்கெட் சபை பயன்பெறாமல் இருக்குமானல் வெளிநாடுகள் பயன்பெறுவதை நாம் தடுக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை  கிரிக்கெட்டில் சூதாட்டக்காரர்கள் நிறைந்துள்ளனர்.அதனை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே விளையாட்டுத்துறை அமைச்சு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: