அர்ஜூன் மகேந்திரனுக்கு இன்ரப்பொல் பிடியாணை!
Friday, April 20th, 2018இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சர்வதேச பொலிஸார் இன்று சிகப்பு அறிவித்தல் பிடியாணையை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்தி வரும் விசாரணைகளுக்கு அமைய சர்வதேச பொலிஸார் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளனர்.
இலங்கையில் பிறந்த அர்ஜூன் மகேந்திரன் சில வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் பிரஜா உரிமையை பெற்றுக்கொண்டார்
வங்கித்துறை சிறப்பான அனுபவங்களை கொண்டுள்ள அவர், சிங்கப்பூரில் மாத்திரமல்லாது சில நாடுகளில் வங்கிகளில் தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூர் பிரஜையான அவர், சிங்கப்பூரில் கடை தெருவொன்றில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று நேற்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
Related posts:
ஊர்காவற்துறை படுகொலை: சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்!
அடுத்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாப்ரிக்காவில்!
மரபுரிமை மையங்களை பாதுகாத்தல்; ‘14 இல் ஈ.பி.டி.பி நிறைவேற்றிய தீர்மானத்தை ’20 இல் மீளக்கொண்டுவந்தது ...
|
|
வித்தியா கொலை வழக்கு: பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றப்புலனாய்வு அதிகாரியைக் கடுமையாக எச்சரித்த நீ...
சபை நிதியில் உள்ளூராட்சி மன்றங்கள் நிவாரணம் வழங்க முடியாது – வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடந்த கூட...
சமூக விரோத செயலைக் கட்டுப்படுத்த முயன்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது வாள் வெட்டு – படுகாயமடைந்த நிலையி...