அரிசி, இறைச்சி மற்றும் முட்டை மீது கட்டுப்பாட்டு விலை!

Thursday, August 9th, 2018

சம்பா அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு வாழ்க்கை செலவு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் சம்பா அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதால் வாழ்க்கைச் செலவு குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் இரண்டு வாரங்களிற்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பிலும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

Related posts: