அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம் – ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவர்களிடம் வலியுறுத்து!

Tuesday, June 7th, 2022

அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார தீர்வு தொடர்பில் முதற்கட்டமாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என இதன்போது பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

000

Related posts:

பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன - அமைச்...
சிறுவர் தினத்தின் இலக்கை அடைவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்...
நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர...