அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுப்பு!

Monday, December 27th, 2021

தேசிய பாதுகாப்பு தினத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம் உன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருடன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தொண்டர்களும் இணைந்து வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு நாள் நிகழ்வின் தொடர்ச்சியாக வீதி பாதுகாப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் நேற்றையதனமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இதன்போது வீதி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடப்பதன் ஊடாக விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான அறிவுறுத்தல்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு செய்ய திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் கலந்துகொண்டிருந்தமை விழிப்புணர்வு திட்டத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: