அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமிம் எதுவும் இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும் எண்ணமும் ஆளும் கட்சிக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – தேர்தலை ஒத்திவைக்கவோ அன்றி அவ்வாறான திட்டம் எதுவுமில்லை, நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினதும் அரசியல் வாழ்க்கையில் தேர்தல்களை ஒத்திவைப்பது அல்லது நீடிப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த மூன்று வருடங்களிற்கும் பொதுமக்களிற்கு நீதியாக நடந்துகொள்ள அரசாங்கம் என்ற முறையில் முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: