அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தியில் பாரதப் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, January 19th, 2021

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தி ஒன்றிலேயே இந்த கருத்தை மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்படுவதை முன்னிட்டு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து டுவிட்டர் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த பிரதமர் மோடி, அயல்நாடுகளுக்கு உதவும் இந்தியாவின் திட்டம் கொரோனா தடுப்பூசி விடயத்திலும் தொடரும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: