அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களுக்கு முடியுமானவரை தீர்வுகண்டு வருகின்றோம் – ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றிகன் தெரிவிப்பு!

Monday, January 25th, 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தில் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் வறிய குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்து கொடுக்கும் வகையிலான திட்டங்களை எமது பிரதேசத்தில் முடியுமானவரை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் இளங்கோ அவ்வாறான தேவைப்பாடுகளுடன் காத்திருக்கும் பல பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை சுயநலத்துக்காக சில அதிகாரிகள் தட்டிக்கழித்து வரும் செயற்பாடுகள் வேதனையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிழவுகள் மற்றும் செயற்றிட்டங்களை யாழ்ப்பாணம் பிரதேச மக்களிடம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

யாழ் மாவட்டத்தின் மையமாக காணப்படும் எமது பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகளை எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிநடத்தலில் மேற்கொண்டுள்ளோம். மேற்கொண்டும் வருகின்றோம்.

குறிப்பாக எமது வரலாறுகள் மறைக்கப்படுவதை தடுப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மணிக்கூட்டு கோபுர பகுதியில் மன்னர்களின் சிலையையும் முத்திரைச் சந்தியில் சங்கிலிய மன்னின் சிலை மடத்தடியில் தனிநாயகம் அடிகளாரின் சிலை உள்ளிட்ட இன்றும் பல வலரலாற்று பதிவுகளை நிறுவிக்காட்டியுள்ளார்.  

அதேபோல தமிழரின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ் நகர் மையப்பகுதியில் கலாசார மண்டபத்தை அமைக்க காரணமாகியிருந்தார்.

அத்துடன் யாழ் நகரில் அழிந்துகிடந்த வீரசிங்கம் மண்டபம், யாழ் பொது நூலகம், துரையப்பா விளையாட்டரங்கம் உள்ளிட்ட இன்னோரன்ன கட்டுமாணங்களையும் புதுப்பித்தும் கட்டியும் காட்டியுள்ளார்.

இதைவிட பிரதான வீதிகள், உள்ளக வீதிகள், சனசமூக நிலையங்கள், கடற்றொழிலாளர் சங்க கட்டடங்கள், பொது நோக்கு மண்டபங்கள், இந்து கிருஸ்தவ ஆலய புனரமைப்புகள், சந்தைகள் யாழ் நகரப் பகுதி கடைத்தொகுதி உள்ளிட்ட ஏராளமானவற்றையும் புனரமைத்து மக்களிடம் வழங்கியுள்ளார்.

வாழ்வாதாரத்தில் பின்தங்கியிருந்த எமது பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உதவிகளையும் இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுத்தது மட்டுமல்லாது அரச தொழில் வாய்ப்புகளையும் பாரபட்சமின்றி வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக யாழ்ப்பாணம் பிரதேசத்தில் காணப்படும் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் பல தீர்க்கப்பட்டுமுள்ளன. குறிப்பாக தற்போதுள்ள கொரோனா முடக்க நிலை காலத்திலும் கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அனுமதிகளை பெற்றுக் கொடுத்திருந்தார்.

இவற்றுடன் வீடுகள் அற்ற வறிய குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்களும் மலலசல கூடங்களற்றவர்களுக்கு மலசல கூடங்களும் மின்சார வசதி பெற வசதியற்றவர்களுக்கு இலவச மின்சார வசதிகளையும் கடந்த காலங்களை போன்று தற்போதும் பெற்றுக்கொடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.

ஆனாலும் எமது கட்சியின் இத்தகைய மக்கள் நலன் சார் திட்ட முன்னெடுப்புகளை கண்டு பொறாமைகொள்யும் இதர தரப்பினர் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும் அதேபொன்று அவற்றை தமதென்று உரிமைகோரும் கீழ்த்தரமான செயற்பாடுகளையும் ஒரு சில அதிகாரிகளை கொண்டும் ஒருங்கிணைப்பு குழு என்னும் அதிகாரத்தை கொண்டும் மேற்கொண்டு வருகின்றனர். அத்தகையவர்களது சுயநலன்களுக்காக உண்மையில் உதவிகளை எதிர்பார்த்துள்ள மக்கள் பலர் புறக்கணிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது.

இத்தகைய தடைகளையும் தாண்டி எமது கட்சியின் செயற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் பொறுமையுடன் முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

000

Related posts: