அமைச்சர் கம்மப்பிலக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; இன்றும் நாளையும் விவாதம்!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்றுகாலை 10.00 மணிக்கு நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்கட்சியின் 44 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றும், நாளையும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதன்போது சுயாதீனமாகக் கருத்துத் தெரிவிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது..
விவாதம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பரீட்சை நிலையங்களுக்குள் கைத்தொலைபேசிக்குத் தடை!
கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - மாவட்ட சுகாதார சேவைகள் ப...
அரசியல் பழிவாங்கல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்: அறிக்கை தயார்!
|
|