அமைச்சரவையின் நியமனத்தை தொழிற்சங்கங்கள் ஏற்கவேண்டும் – நிதியமைச்சர்!

Saturday, February 2nd, 2019

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டதாகவும் தொழிற்சங்கங்களால் அதனை எதிர்க்க முடியாது எனவும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய திறமையான அதிகாரிகளை பிரதானிகளாக நியமிக்க அமைச்சரவைக்கு அதிகாரம் இருக்கின்றது எனவும் அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பதில் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதால், அவருடன் இணைந்து பணியாற்றுமாறும் அமைச்சர், கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:

பாஃம் எண்ணெய் இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு - அரசாங்க கணக்குகள் பற்றிய குழ...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் கைக்கோர்த்து சவாலை வெற்றி கொள்ள வேண்டும் - பிரதமர...
யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில்!