அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து!

இன்றைய தினம் அமெரிக்காவின் 241 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
1948 ஆம் ஆண்டு முதல் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு காணப்படுவதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.விஷேடமாக இலங்கையில் தற்போது ஒன்றிணைந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் அந்த உறவு மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளதாக ஜனாதிபதியின் வாழ்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: தனியான விசாரணை நடைபெறும் என பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு!
மழையுடன் கூடிய காலநிலை இன்றும் நீடிக்கும்!
தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கவனயீனம் - இளம் குடும்பஸ்தர் பரிதாப பலி!
|
|