அமரர் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  இறுதி அஞ்சலி!

Tuesday, November 14th, 2017

அமரர் மாணிக்கம் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மலர்வளையம்  சாத்தி கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து  இறுதி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அன்னாரின் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்..

சுகயீனமுற்றிருந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த அமரர் கனகரத்தினம் கடந்த 12 ஆம் திகதி காலமானார்.

இந்நிலையில் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அன்னாரின் பிரிவால்  துயருற்றிருக்கும்  உற்றார் உறவினர்களுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆறுதலையும்  அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

இதன்போது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினரமான தவநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரி அலன்ரின் (உதயன்), கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

காலஞ்சென்ற அமரர் கனகரத்தினத்தின் இறுதிக்கிரியைகள் நாளையதினம் முற்பகல் 11 மணியளவில்  (15)  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மலேரியா நோயிலிருந்து எமது தேசத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைப்போம் - வேலணை பிரதேச சபையின் தவிசா...
இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இலங்கையையும் பாதிக்கும் - இந்தியாவுக்கான இலங்கை உ...
வெசாக் வாரம் ஆரம்பம் - எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு என விநியோகஸ்தர்கள் தெரிவிப்...