அனைவரும் புத்தாண்டை மிகுந்த அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Sunday, January 1st, 2023பல சவால்களுக்கு மத்தியிலும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் புத்தாண்டை எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உணவு பாதுகாப்பு மற்றும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அடைய அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பெரும்பாலான மக்களுக்கு கடினமாக இருந்த போதிலும், பல சவால்களுக்கு மத்தியிலும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப இந்த புதிய ஆண்டில் ஒன்றிணைய வேண்டும் என்றும் தனது புத்தாண்டு செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இந்த புத்தாண்டில் வளமான நாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கும் உள்ளுர் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கான உத்திகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|