அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும்!

Friday, November 6th, 2020

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தினை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் குறித்த குழுவின் தலைவர் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோ தலைமையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் 3000 வீடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4000 வீடுகளும் மின்சார இணைப்பு இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: