அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக நாணயக் கடிதத்தை விடுவிக்கத் தீர்மானம் – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Saturday, April 23rd, 2022

இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள 186 மருந்துப் பொருட்களுக்காக, 19.2 மில்லியன் டொலர் நாணயக் கடிதத்தை விடுவிக்க முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மருந்துத் தடுப்பாட்டை முகாமைத்துவம் செய்ய முடியும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகள் கிடைப்பதற்கு, 100 நாட்கள் அளவில் எடுக்கும். நாணயக் கடிதம் விடுவிக்கப்பட்டதன் பின்னரே, வெளிநாட்டு உற்பத்தியாளர்கள், இலங்கைக்காக தங்களது உற்பத்திகளை ஆரம்பிப்பர்.

இவ்வாறான நிலையில், சில நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவசர உதவியாக மருத்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட சில நாடுகள் மருந்துப் பொருட்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 715 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க இணக்கம் - சட்டமா அ...
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் தீப்பரவல் - சுற்றாடல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிட மூன்று ஆண்டுகள் தேவை - அவுஸ்திர...
இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது - இது இந்தியாவின் கருத்து என இலங்கையில் உள்ள இந்த...