அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்!

Saturday, June 16th, 2018

வடமராட்சி வலயத்தில் வெற்றிடமாகவுள்ள யா.இமையாணன் அ.த.க.வித்தியாலயத்தின் (வகை-11) அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கீழ்வரும் தகைமையுடைய அதிபர்கள் குறித்த பாடசாலைக்கான அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரி பின்வரும தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்

  1. இலங்கை அதிபர் சேவையில் தரம் 2,3 தரமுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
  2. இலங்கை அதிபர் சேவையில் அதிபராக கடமையாற்றாதவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். (இவர்களுக்கு பிரிவு 4 பொருத்தமாகாது)
  3. வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நிரந்தரமாக சேவையாற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.
  4. விண்ணப்பதாரி தற்போது கடமையாற்றும் பாடசாலையில் ஆகக்குறைந்தது மூன்று வருடங்கள் தொடர்ச்சியான சேவையினை ஆற்றியிருத்தல் வேண்டும்.
  5. விண்ணப்பதாரி ஆகக் குறைந்தது மூன்று வருடங்களுக்கு கடமையாற்றக் கூடிய வயதெல்லையை உடையவராக இருத்தல் வேண்டும்.
  6. இலங்கை அதிபர் சேவை தரம் 2 ஐ சேர்ந்தவர்களது பொருத்தமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் மாத்திரம் தரம் 3 ஐச் சேர்ந்தவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
  7. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 29.06.2018 ஆகும்.
  8. விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்விற்கு தோற்றுதல் வேண்டும்.
  9. விண்ணப்பப்படிவங்களை வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி நிர்வாகப் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும் என வலயக்கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Related posts: