அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, June 2nd, 2021

அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும் பழவகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: