அதிகாரம் வழங்கப்படவில்லை – தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவோம் – பொது சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு!

Sunday, July 5th, 2020

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தமக்கு அதிகாரம் வழங்கப்படாத நிலையில் பொது சுகாதார அதிகாரிகள் தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் இடம்பெறும் தேர்தல் பரப்புரைகள் போன்ற இடங்களில் கடமையாற்ற மாட்டார்கள் எனவும் பொது சுகாதார அதிகாரிகளின் சங்க செயலளார் எம் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் சுகாதார அமைச்சை வலியுறுத்திய போதும் இதுவரை தீர்வு எட்டப்பட்டவிலை என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பான ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உரியமுறையில் விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்காணித்தல், தேர்தல் வாக்குச்சாவடிகளை தேர்தல் தினத்துக்கு முன்னரும், பின்னரும் கண்காணித்தல், கிருமி நீக்கலை உறுதிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளே பொது சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனினும் தமக்கு கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற அதிகாரங்கள் தேவை என்று பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த அதிகாரங்கள் தமக்கு கிடைக்காத நிலையில் தாம் தேர்தல் தினத்தன்று மாத்திரம் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: