அடுத்த மூன்று வாரங்கள் ஆபத்தானவை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Thursday, April 22nd, 2021

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என  எச்சரித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதை சூழலில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது மக்கள் முகமூடி அணிவது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வார இறுதி நாட்களில் பொதுமக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தவிர்ப்பது மிகவும் அவசியமானது எனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts: