அடிப்படை தேவைகளை பெற்றுத்தருமாறு அரியாலை  முள்ளிக்கிராம மக்கள் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை!

Saturday, October 1st, 2016

அரியாலை முள்ளிக்கிராம மக்கள் தாம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியாலை முள்ளிகிராமத்தில் நேற்றையதினம் (30) நடைபெற்ற சந்திப்பில்  குறித்த பகுதியில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் மற்றும் இலவச மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு அப்பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாகச் செயலாளரும் முன்னாள் நல்லூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அம்பலம் இரவீந்திரதாசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதி மக்களது நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட இரவீந்தரதாசன் மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கான உதவிகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் நிர்வாகக்குழு உறுப்பினர்களான முன்னாள் பனை தென்னை அபிவிருத்தி சங்க செயலாளர் தம்பு சிவலிங்கம், பிரதீபன் மற்றும் திருமதி.ஜெ.தயாளினி ஆகியோர் உடனிருந்தனர்.

unnamed (1)

unnamed (2)

Related posts: