அஞ்சல் மா அதிபரின் முக்கிய வேண்டுகோள்!

Monday, June 18th, 2018

அஞ்சல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்து விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த போராட்டம் காரணமாக தபால் சேவை பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. எனவே கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி கடந்த 11ஆம் திகதி முதல் 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: