மூவருக்கு மரண தண்டனை

Thursday, March 17th, 2016

நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலே, இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு இது குறித்து விசாரணை செய்த பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

மேலும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 24, 32 மற்றும் 35 வயதான சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Related posts: