வெலிகடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று!

Tuesday, July 7th, 2020

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கைதி கந்தக்காடுவில் அமைந்துள்ள போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளியுடன் நெருங்கி செயற்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் குறித்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுளள்ளது.

வெலிசர கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சுமார் 800 இற்கும் முற்பட்ட கடற்படையினருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சிறைச்சாலைக்குள் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பல கைதிகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

Related posts: