விவசாயிகளுக்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் விசேட செய்தி!

கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் இந்த வருடம் 2 ஆயிரத்து 790 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என சிறுபோக குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
பயிர்ச் செய்கையில் விவசாயிகள் நடைமுறை ஒழுங்குகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் வறட்சியான சூழலை எதிர்கொண்டதில், பயிர்ச் செய்கைகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன.
இந்தநிலையில் தற்போது குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றமையினால், நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சிறந்த முறையில் சிறுபோக நெற்செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
திருகோணமலை இறக்ககண்டி வாழையூற்று மக்களுடன் ஈ.பி.டிபியினர் சந்திப்பு
திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுக்கான அனைத்துஏற்பாடுகளும் பூர்த்தி - மன்னார் மாவட்ட அரசாங...
21 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு சாதகமாகவே உள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|