வில்பத்து காடழிப்பு தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் சமர்பிக்க நடவடிக்கை!

Tuesday, January 3rd, 2017

வில்பத்து சரணாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் காடழிப்பு தொடர்பான அறிக்கை வனஜீவராசிகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

வில்பத்து – விலந்திகுளம் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்ததாகக் கூறப்படுகின்ற காடழிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் விசேட குழுவொன்று கடந்த 31ஆம் திகதி அங்கு விஜயம் செய்து ஆராய்ந்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் வில்பத்து சரணாலயத்தில் இவ்வாறான அநாவசிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வில்பத்து சரணாலயம் தொடர்பாக முழுமையான அதிகாரம் சிலாவத்துரை பிரதேச செயலகத்திற்கு காணப்படுகின்றது.

எனினும் இவ்வாறான காடழிப்பு விவகாரத்தை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்ததோடு இதுகுறித்து விசேட குழு ஒன்றையும் அமைத்தார்.

குறித்த குழுவின் ஆலோசனைப்படி வில்பத்து சரணாலயத்திற்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் குழு அறிக்கை ஒன்றை தயாரித்திருப்பதோடு அந்த அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

download (1)

Related posts: