விரைவில் பாவனைக்கு வருகின்றது மின்சார ரயில்!

Wednesday, November 23rd, 2016

இலங்கையில் மின்சார ரயில் சேவையை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் கள ஆயத்தப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த தகவலை போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த பணிகளை முன்னெடுக்க வழிகாட்டும் நடவடிக்கைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி முதல் கட்ட பணிகளுக்கு 300 மில்லியன் அமரிக்க டொலர்களும் இரண்டாம்கட்டப்பணிகளுக்கு 300 மில்லியன் டொலர்களும் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ob_e004f8_438376418fast-moving-train

Related posts: