வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்!

முன்பள்ளிச் சிறார்களும், ஆரம்பப் பிரிவு மாணவர்களும் ஒன்றிணைந்து எமது சமூதாயத்தில் அருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை(04) யாழ். சுன்னாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியுள்ளனர். வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட சுன்னாகம் பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏற்பாடு செய்து நடாத்தினர்.
உடுவில் மான்ஸ் தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று முற்பகல்-10.15 மணியளவில் ஆரம்பமாகிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் சுன்னாகம் பொதுநூலகம் வரை இடம்பெற்றுள்ளது.
இந்த ஊர்வலத்தில் வலி.தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட முன்பள்ளிச் சிறுவர், சிறுமிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமிகள் வாசிப்பு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலான பல்வேறு பாதாதைகளைத் தாங்கியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
Related posts:
|
|