வாகனத்தின் விலையில் மாற்றம்.!

Thursday, March 12th, 2020

ஜப்பான் யென்னின் பெறுமதி அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.சசுக்கி வெகனாரின் விலை ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.

டொயோடா பெசோ வாகனத்தில் விலை ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவினாலும், டொயோடா விட்ஸ் வாகனத்தின் விலை 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

டொயோடா எக்ஸியோவின் விலை 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவினாலும், ஹொண்டா வெசல் வாகனத்தின் விலை 4 இலட்சத்தினாலும், ஹொண்டா க்ரேஸ் வாகனத்தின் விலை 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிப்படவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: