வவுனியா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் கைது!

Wednesday, February 8th, 2017

வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் நான்கு பேரிடம் வைத்தியசாலையில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து 120,000 ரூபாவினைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை இது தொடர்பாக பணம் கொடுத்த ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து, பொலிசார் சூட்சுமான முறையில் இன்று மாலை குறித்த தாதிய உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்

arrest_07

Related posts: