வவுனியாவில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் – வெளியானது புதிய காரணம்!

Friday, April 3rd, 2020

வவுனியா கற்குழியில் மரணித்த பெண்மணிக்கு நிமோனியா காய்ச்சலே காரணமென வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

முன்னதாக வவுனியாவில் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் கொரோனோ தொற்றில் உயிரிழந்ததாக வதந்தி பரப்பப்பட்டிருந்தது.

இதனிடையே சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் பங்குபற்றி சுயதனிமைப்படுத்தலில் தத்தமது வீடுகளில் தங்கியுள்ள 326 பேரையும் சுயதனிமைப்படுத்தல் விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடித்து வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாமென கேட்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கையில் இவர்களில் யாருக்காவது காய்ச்சல், வறண்ட இருமல் மற்றும் தொண்டைநோ போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிப்பதுடன் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஆ.கேதீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts: