வடலியடைப்பில் பச்சிளம் குழந்தை மீட்பு!

Sunday, August 7th, 2016

இளவாளை – வடலியடப்பு பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்து 10 நாட்களேயான குறித்த ஆண் குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு, வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் கிடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொது மக்கள் அதனை மீட்டு, இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் அந்த சிசு  தெல்லிப்பளை  வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: