வடமாகாணப் பாடசாலைகளில் நடாத்தப்படவுள்ள மூன்றாம் தவணைப் பரீட்சைக்குரிய நேர அட்டவணை!

Friday, October 21st, 2016

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் வடமாகாணப் பாடசாலைகளில் நடாத்தப்படவுள்ள மூன்றாம் தவணைப் பரீட்சைக்குரிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் தவணைப் பரீட்சையில் தரம்- 11 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை எதிர்வரும்-24 ஆம் திகதி ஆரம்பமாகி 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

தரம்- 06 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான பரீட்சை நவம்பர் மாதம்- 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் தரம்-03 தொடக்கம் தரம்-05 வரையான மாணவர்களுக்கான பரீட்சை நவம்பர்-24 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தரம்-10 இற்கான செய்முறைப் பரீட்சை நவம்பர்-08 ஆம் திகதியும், தரம்-09 இற்கான பரீட்சை நவம்பர்-10 ஆம் திகதியும் நடாத்தப்படவுள்ளது.

exam21-626x380

Related posts:

  சகோதரனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டுச் சென்ற சிறுவன் - சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்திட...
டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான எச்சரிக்க...
இலங்கையிடம் எந்தவிதமான திட்டமும் இல்லாதிருந்த போது இந்தியா மட்டுமே ஒரே பங்காளியாக இருந்தது - இந்தியா...