வங்கிகள் ஊடாக மக்கள் கடன் பெற வேண்டும் – வறுமை கடன் ஒழிப்புத் திட்டத்தின் குழுத் தலைவர்!

central-bank Monday, March 20th, 2017

மக்கள் கடன்களை வங்கிகள் ஊடாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். தவறான முறைகளில் கடன் பெறுவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் வறுமை கடன் ஒழிப்புத் திட்டத்தின் குழுத் தலைவரும் சிறிபத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

வட மாகாணத்தில் 1ஆவது வறுமையான மாவட்டமாக முல்லைத்தீவு, 3ஆவதாக மன்னாரும் 5வதாக கிளிநொச்சியும் உள்ளன. வன்னி மாவட்டத்தில் கருத்தரங்குகளை, விழிப்புணர்வுகளை உதவி அரச அதிபரின் அலுவலகங்களிலே அவர்களுடைய உதவியுடன் மேற்கொண்டு வருகின்றோம். வறுமை ஒழிப்புக்கடன் திட்டம் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிற்பாடு நாங்கள் அரம்பித்து வெற்றிகரமான முறையிலே இந்தக் கடன் திட்டத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு காளான், இஞ்சி போன்றவற்றை வழங்கி அதை உற்பத்தி செய்து அவற்றை எற்றுமதி செய்து வருகின்றோம்.

அவர்களின் உற்பத்தி திறனுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் வருமானங்களை அதிகரித்து வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்களுக்குக் கடன் வழங்குவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அவர்களுக்கு என்னன்ன தேவைகளோ அந்த முறைமை வங்கியில் கடன் பெறுவது என்றால் அதற்கு சில முறைமைகள் இருக்கினறன. அந்த முறைமைகளை அவர்கள் தனியார்ப்படுத்தி கொண்டு செல்வார்களானால் வங்கியில். கடன் பெறுவதற்கு  எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. தெரியாமல் தவறான முறையிலே சென்றால் கடன்பெற முடியாது அவர்கள் கேட்கும் ஆவணங்களை வழங்க முடியாது என்ற குற்றச்சாட்டு சொல்கின்றார்கள்.

இந்தக் குற்றச்சாட்டில் எந்தவிதமான உண்மையும் இல்லை. சரியான நோக்கத்துக்காக கடன் பெற்றுக்கொள்ள முனைந்தால் எந்த ஆவணமும் இல்லை என்று சொல்லப்போவதில்லை. ஆகவே மக்கள் தங்களுடைய முறைமைகளை மாற்றிக் கொண்டு வங்கியில் இலகுவான முறையில் குறைந்த வட்டியில் கடன்பெற முடியும். மத்திய வங்கியால் விவசாயிகளுக்கான கடன்திட்டம், சுயதொழில் கடன் திட்டம், கால்நடை வளர்ப்புத் திட்டம் இவ்வாறு பல விதமான உற்பத்தி கடன்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கடன் திட்டங்களை மக்கள் அனுபவிக்க வேண்டும். ஏனைய நுண்நிதி நிறுவனங்களின் கடன் திட்டத்தை நிறுத்தி வங்கிகளூடாகத் தங்களுக்கான நிதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சட்ட விரோதமான முறையில் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக யாராவது ஒருவர் முறைப்பாடு மேற்கொண்டால் மாத்திரமே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். என்றார்.