யாழ்.கீறின் பில்ட் சன சமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இலவச வைத்தியமுகாம்!

Monday, April 24th, 2017

யாழ்.கீறின் பில்ட் சன சமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாம் கிறீன் பில்ட் சன சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பொ. ஜெசிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை பேராலய பங்கு தந்தை வனபிதா நேரசா ஆரம்பித்து வைத்தார்.

கறித்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரழிவு, இரத்த அழுத்தம் கண்பார்வை குறைபாடு போன்றவை பரிசீலிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை தேவைபடுவோரை உரிய வைத்திய நிருபரை சந்திப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டது.

Related posts: