மேலும் 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய பஹ்ரைனில் சிக்கித் தவித்த மேலும் 180 இலங்கையர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நாடு திரும்பியுள்ளனர்.
பஹ்ரைனிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளிவந்தவுடன் அவர்களை முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியப் பிரஜைகளே திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா பரவியமைக்கு காரணம் – சுகாதாரா அதிகாரிகள் தெரிவிப்...
இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் வலிமைகளை பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏ...
யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பயணத்தை மறக்கமாட்டேன் - இந்திய பிரதமர் புகழாரம்!
|
|