முற்றவெளிப் பகுதியில் சுத்திகரிப்பு பணி தீவிரம்!

Wednesday, October 5th, 2016

யாழ். முற்றவெளிப்பகுதியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மாநகரசபை ஈடுபட்டுள்ளது. இப்பகுதியில் கூடுதலாக கழிவுப் பொருட்கள் மற்றும்  பொலித்தீன்கள் அதிகளவில் காணப்பட்டன. மாநகர சுத்திகரிப்பாளர்கள் இக்கழிவுகளை அகற்றி துப்பரவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

முனீஸ்வரன் கோவிலடி, நூல் நிலைய பிரதேசம், துரையப்பா விளையாட்டு அரங்கு, மாநகரசபை மைதான வளாகம் போன்ற பகுதிகளை உள்ளடக்கி இந்த துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. துப்பரவு செய்யப்படும் கழிவுப் பொருட்கள் உடனடியாகவே வாகனம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றது.

watermarked-DSCF8010

Related posts: