மீனவர் பிரச்னை பேச்சுவார்த்தை திகதியில் மாற்றம்!!

Sunday, March 13th, 2016

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை திகதியை இந்தியா மீள் அட்டவணைப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும் உரிய திகதி அறிவிக்கப்படவில்லை.

இந்த மாதத்தில் இலங்கையின் அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருந்தார்.இந்திய வெளியுறவு அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதேவேளை இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டமைக்கான அறிவிப்பும் இலங்கை அரசாங்கத்துக்கு இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.

Related posts: